Posts Tagged ‘language’

சென்னை: “”தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், தமிழ்மொழிப் பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்பட மாட்டாது,” என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய தாய்மொழி எதுவாக இருந்தாலும், அவர்கள் கட்டாயமாக தமிழை படிக்க வேண்டும்.அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், அந்தந்த மாநில மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என உத்தரவு இருக்கிறது. எனவே, தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக தமிழ்ப் பாடத்தை படித்தாக வேண்டும் என்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை; ஆசிரியர்கள் இல்லை என்ற குறைகளை சரிசெய்ய, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.

இன்று அறிவிப்பு? ஆந்திரா, கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழக அரசுப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ்ப்பாட ஆசிரியர்கள் இல்லை என்றும், காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் கூறினார். “இந்த குறையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். சிறிது நேரத்தில், முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதியை அழைத்துப் பேசினார். கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி, தேவையான ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களைப் பெறவும், அங்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, எல்லையோர அரசுப் பள்ளிகளில், போதிய ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று, தனது பதிலுரையின்போது வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Dinamalar : http://www.dinamalar.com/News_detail.asp?Id=398817

Advertisements